லோக் அதாலத் பணிகளைப் புறக்கணிப்பது என கோயம்புத்தூர் பார் அசோசியேஷன் கூட்டத்தில் தீர்மானம்

E.C கோர்ட் நீதிபதி மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் லோக் அதாலத் பணிகளைப் புறக்கணிப்பது என கோயம்புத்தூர் பார் அசோசியேஷன் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: E.C கோர்ட் நீதிபதி மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் லோக் அதாலத் பணிகளைப் புறக்கணிப்பது என கோயம்புத்தூர் பார் அசோசியேஷன் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

10.12.2021 ம்-தேதி நடந்த CBA-பொதுக்குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

1. கடந்த 09.11.2021 ம்-தேதி CBA-சங்க நிர்வாகிகளிடம் கோயமுத்தூர் E.C Court நீதிபதி N.லோகேஷ்வரன் தரக்குறைவாகவும், கண்ணிய குறைவாகவும், சட்டத்திற்கு முரணாகவும் நடந்து கொண்டதோடு மட்டுமின்றி சங்க நிர்வாகிகளை இழிவு படுத்தும் வகையில் சங்க நிர்வாகிகள் மீது பொய்யான மற்றும் அவதூறான கருத்துக்களை சொல்லி உத்தரவு பிறப்பித்ததின் அடிப்படையில், மேற்படி E.C.Court நீதிபதி மீது உரிய துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக் கோரி நமது சங்க நிர்வாகிகள் கடந்த 23.11.2021 ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்களை நேரில் சந்தித்து எழுத்து மூலமான புகார் கொடுத்தும் இதுவரை மேற்படி E.C.Court நீதிபதி மீது எந்தவித துறை ரீதியிலான நடவடிக்கையும் எடுக்காததால் நாளை 11.12.2021 ம் தேதி நடைபெறும் National Lok Adalat ன் பணிகளிலிருந்து வழக்கறிஞர்கள் முழுமையாக விலகி இருப்பது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. கோயமுத்தூர் E.C.Court நீதிபதி N.லோகேஷ்வரன் மீது உரிய துறை ரீதியிலான நடவடிக்கையைச் சென்னை உயர்நீதிமன்றம் எடுக்கப்படும் வரை தொடர்ந்து மேற்படி E.C Court ன் பணிகளிலிருந்து வழக்கறிஞர்கள் விலகி இருப்பது என்று ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...