திருச்செந்தூர் - பொள்ளாச்சி எக்ஸ்பிரஸை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும் -ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

திருச்செந்தூர் - பொள்ளாச்சி இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க மதுரை, சேலம் ரயில்வே கோட்டங்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.


பொள்ளாச்சி: திருச்செந்தூர் - பொள்ளாச்சி இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க மதுரை, சேலம் ரயில்வே கோட்டங்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

திருச்செந்தூரிலிருந்து பாலக்காட்டுக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 2-ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதைத் திருச்செந்தூரிலிருந்து பொள்ளாச்சி வரை எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க கடந்த 6-ம் தேதி ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. ரயில் இயக்கப்படும் தேதியை தெற்கு ரயில்வே விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த ரயிலைத் திருச்செந்தூர் - மேட்டுப்பாளையம் இடையே இயக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும், ரயில் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது:-

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர் சோலை, பழனி மற்றும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில், மருதமலை முருகன் கோயில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், மேட்டுப்பாளையம் வன பத்தரகாளியம்மன் கோயில்களுக்குச் சென்று வர பக்தர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பயன் பெறுவார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் தென் மாவட்ட மக்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும். பாலக்காடு கோட்டம் இந்த ரயிலையும் பாலக்காட்டுக்குக் கொண்டு செல்வதில் குறியாக உள்ளது.

எனவே, மதுரை கோட்டம் பாலக்காடு கோட்டத்தின் பரிந்துரைக்கு உடன்படக் கூடாது. சேலம் கோட்டமும், மதுரை கோட்டமும் இணைந்து ஆக்கப் பூர்வமாக மேட்டுப்பாளையம் வரை திருச்செந்தூர் - பொள்ளாச்சி எக்ஸ்பிரஸ் ரயிலை நீட்டிக்க ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே மூலம் பரிந்துரை செய்ய வேண்டும் என கூறினார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...