சிதலமடைந்த சிவன்‌ கோவில்‌: கலசத்திற்கு மீண்டும்‌ பிரதிஷ்டை செய்த ஈஷா யோகா மையம்

பல ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்ட சிவன்‌ கோவிலின்‌ கோபுர கலசத்திற்குச் சத்குருவால்‌ பிரதிஷ்டை செய்யப்பட்ட எந்திரத்தைக் கொண்டு ஈஷா பிரம்மச்சாரிகள்‌ சக்கியூட்டினர்‌.



கோவை: பல ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்ட சிவன்‌ கோவிலின்‌ கோபுர கலசத்திற்குச் சத்குருவால்‌ பிரதிஷ்டை செய்யப்பட்ட எந்திரத்தைக் கொண்டு ஈஷா பிரம்மச்சாரிகள்‌ சக்கியூட்டினர்‌.

சென்னையிலிருந்து 70 கி.மீ தொலைவில்‌ இருக்கும்‌ திருக்கழுக்குன்றம்‌ அருகே அமைந்துள்ளது. குடிபேரம்பாக்கம்‌ என்னும்‌ கிராமம்‌. அங்கு இருக்கும்‌ குமரேஸ்வரர்‌ கோவில்‌ முருகப் பெருமானால்‌ வழிப்பட்ட தலமாகவும்‌, மிகவும்‌ பழமையான சிவ தலமாகவும்‌ அறியப்படுகிறது.

இக்கோவில்‌ பல ஆண்டுகளாகப் பூஜைகளும்‌ வழிபாடுகளும்‌ சரியாக நடக்காமல்‌ சிதலமடைந்து கிடந்தது. இதனை பார்த்து மனம்‌ வருந்திய அவ்வூர்‌ பக்தர்கள்‌ சில தன்னார்வ அமைப்புகளின்‌ உதவியுடன்‌ அக்கோவிலை படிப்படியாக புனரமைத்து தற்போது புதுப்‌ பொலிவுடன்‌ மாற்றி இருக்கின்றனர்‌.

அத்துடன்‌, கோவிலுக்கு சிறப்பான முறையில்‌ கும்பாபிஷேகமும்‌ நடத்தி மகிழ்ந்துள்ளனர்‌. அதன்‌ ஒரு பகுதியாக, கோபுர கலசத்திற்கு சக்கியூட்டுவதற்காக அவர்கள்‌ ஈஷா பிரம்மாச்சாரிகளுக்கு அழைப்பு விடுத்தனர்‌.



அதை ஏற்ற ஈஷாவின்‌ பிரம்மாச்சாரிகள்‌ கோவையிலிருந்து அங்குச் சென்று சிறப்புப் பூஜை ஒன்றையும்‌ நடத்தினர்‌.



அப்போது சத்குரு அவர்கள்‌ பிரதிஷ்டை செய்த எந்திரத்தைக் கோபுர கலசத்திற்குள்‌ வைத்து குரு பூஜை செய்தனர்‌. மேலும்‌, 'யோக யோக யோகேஸ்வராய' என்ற மந்திர உச்சாடனையையும்‌ அவர்கள்‌ மேற்கொண்டனர்‌.



பின்னர்‌, ஆகம முறைப்படி அக்கலசம்‌ நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகமும்‌ நடைபெற்றது. இந்நிகழ்வில்‌ நூற்றுக்கும்‌ மேற்பட்ட சிவ பக்தர்கள்‌, கிராம மக்கள்‌ மற்றும்‌ ஈஷா தன்னார்வலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...