திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் 10 நிமிடம் வாகனம் நிறுத்தும் போராட்டம்..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக போராட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நிமிடம் வாகனம் நிறுத்தும் போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றனர்‌.



பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாலும், உடனடியாக மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், மத்திய அரசு மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக கூறியும் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அருகே காங்கேயம் சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் 10 நிமிடம் வாகனம் நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர். மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் வாகன நிறுத்த போராட்டம் நடைபெற்றதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றனர்‌.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...