வால்பாறை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு..! போலீசார் விசாரணை!

இறந்தவரின் உடலை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கூழாங்கல் ஆற்று பகுதியில் தேயிலை தோட்டத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக காலையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் வால்பாறை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, வால்பாறை காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அதில் சுமார் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஒருவர் தேயிலைத் தோட்டத்தில் அருகில் இறந்து கிடந்துள்ளார்.



இதனை தொடர்ந்து, காவல்துறையினர் ஆய்வு செய்ததில் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இறந்தவர் பெயர் யார் என்பது இதுவரை தெரியவில்லை, இறந்தவரின் உடலை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.



இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...