கோவை அருகே வீட்டில் திருவோட்டை வைத்துவிட்டு ரூ. 3 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற சாமியார்..!

புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் சாமியார் ராஜேந்திரன் என்கிற அன்பே சிவம் என்ற நபரை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் வீட்டில் தங்கிய சாமியார் திருவோட்டை வைத்துவிட்டு 3 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மன்னார்சாமி என்பவரின் மகன் கௌதம் (39). இவர் சொந்தமாக மருந்து கம்பெனி நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கௌதம் ஆன்மீக பணிகளில் ஈடுபட்டார். இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலைக்கு அடிக்கடி சென்று வந்தார்.

அப்போது, அங்கே செல்லும்பொழுது சாமியார் ராஜேந்திரன் என்கிற அன்பே சிவம் என்ற சாமியாருடன் தொடர்பு ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் சென்று வரும்போது அவரை சந்தித்து மூலிகைகள் மற்றும் மருந்துகள் குறித்து விளக்கம் கேட்பது கௌதமின் வழக்கம். சில நேரங்களில் சாமியார் ராஜேந்திரன் ஒரு சில மூலிகை மருந்துகளை கௌதமிற்கு கொடுத்து அனுப்பியுள்ளார். அதை கௌதம் தனது நண்பர்கள் உறவினர்களுக்கு கொடுத்ததில் நோய்கள் குணமாகி உள்ளது.

இதனிடையே, ஒரு முறை சதுரகிரி செல்லும் பொழுது கௌதம் தனது செல்போன் எண் மற்றும் கோயம்புத்தூர் வந்தால் தனது வீட்டிற்கு வரும்படி சாமியார் ராஜேந்திரனுக்கு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, செப்டம்பர் மாதம் சாமியார் ராஜேந்திரன் என்கிற அன்பே சிவம் கோவைக்கு வந்து கௌதமை சந்தித்தார். தொடர்ந்து கௌதம் மூலிகை மருந்துகள் மற்றும் எண்ணெய்களை தயாரித்து கோவையிலேயே விற்பனை செய்யலாம் என்று சாமியார் ராஜேந்திரன் இடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சாமியார் ராஜேந்திரன் கௌதமின் வீட்டில் தங்கத் தொடங்கினார். கௌதம் அவருக்கு தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் செலவுக்கு பணம் என கொடுத்து வந்தார்.

இந்நிலையில், கௌதம் தனது வீட்டின் ஒரு பகுதியை வேறு ஒருவருக்கு பத்து லட்ச ரூபாய்க்கு லீசுக்கு கொடுத்தார். வங்கியில் இருந்த அந்த பணத்தில் இருந்து 3 லட்ச ரூபாயை கௌதம் எடுத்துக்கொண்டு வந்து நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார்.

தொடர்ந்து சாமியார் ராஜேந்திரனிடம் பேசிவிட்டு பணத்தை வீட்டின் முன் அறையில் உள்ள டிவி ஸ்டாண்டில் வைத்துவிட்டு தூங்கச் சென்றார். மீண்டும் நேற்று காலை எழுந்து பார்த்தபோது சாமியார் ராஜேந்திரனை காணவில்லை. மேலும் சாமியார் ராஜேந்திரனின் உடைகள் மற்றும் திருவோடு உள்ளிட்டவை வீட்டில் இருந்தது. பின்னர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணம் மூன்று லட்சம் ரூபாயும் திருடு போயிருந்தது.

இதையடுத்து, கௌதம் சாமியார் ராஜேந்திரனை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் சென்று தேடினார். பின்னர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். சாமியார் ராஜேந்திரனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதை அடுத்து, கௌதம் சாமியார் ராஜேந்திரன் தனது மூன்று லட்ச ரூபாய் பணத்தை திருடி விட்டதை உணர்ந்தார்.

இதனை தொடர்ந்து, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் கௌதம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சாமியார் ராஜேந்திரன் என்கிற அன்பே சிவம் என்ற நபரை தேடி வருகின்றனர்.

சாமியார் ராஜேந்திரன் 15 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்து வசித்து வந்ததாகவும் அவரது குடும்பத்தார் சென்னையில் இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...