குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: புலன்‌ விசாரணை மற்றும்‌ விபத்து நடந்தது குறித்த விரிவான ஆலோசனைக் கூட்டம்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13-பேரை பலி வாங்கிய ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான புலன்‌ விசாரணை மற்றும்‌ விபத்து நடந்தது குறித்த விரிவான ஆலோசனைக் கூட்டம்‌ இன்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்‌ சைலேந்திரபாபு தலைமையில்‌ குன்னூரில்‌ நடைபெற்றது.


குன்னூர்: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான புலன்‌ விசாரணை மற்றும்‌ விபத்து நடந்தது குறித்த விரிவான ஆலோசனைக் கூட்டம்‌ இன்று 09.12.2021 ம்‌ தேதி மாலை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்‌ சைலேந்திரபாபு, தலைமையில்‌ குன்னூரில்‌ நடைபெற்றது.

கோவையை அடுத்த சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து காலை 11.30 மணிக்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் இருக்கும் சிப்கானா கிளப்பில் தரையிறங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதனால் அங்கு தீயணைப்பு வாகனம் தயாராக இருந்தது.

இந்த நிலையில் ஹெலிகாப்டர் மேட்டுப்பாளையம் அருகே சென்ற போது பனிமூட்டம் அதிகமாக இருந்து உள்ளது. இந்த ஹெலிகாப்டர் எம்.ஐ.17 வி 5 வகை என்பதால் பனிமூட்டத்திலும் செல்லக்கூடிய வசதி இருப்பதால் தொடர்ந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தைக் கடந்து சென்றபோது ஹெலிகாப்டர் தள்ளாடியபடி சென்று உள்ளது. மேலும் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் ஹெலிகாப்டரால் உயரத்தில் பறக்கவில்லை. தாழ்வாக பறந்து சென்றது.

குன்னூர் காட்டேரி பூங்கா அருகே உள்ள இப்சேட் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது அங்கும் பனிமூட்டம் பரவி இருந்தது. இந்த நிலையில் திடீரென்று அங்கு இருந்த 40 அடி உயரம் கொண்ட மரத்தில் ஹெலிகாப்டரின் இறக்கை மோதியது.

இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி, அவரின் மனைவி மதுலிகா ராவத், மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் என அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த துரதிர்ஷ்ட சம்பவம், நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விபத்தில், விமானத்தின் குருப் கேப்டன் வருண்சிங் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இந்த விபத்து தொடர்பான புலன்‌ விசாரணை மற்றும்‌ விபத்து நடந்தது குறித்த விரிவான ஆலோசனைக் கூட்டம்‌ இன்று 09.12.2021 ம்‌ தேதி மாலை தமிழக காவல்துறை (தலைமை இயக்குனர்‌ சைலேந்திரபாபு, தலைமையில்‌ குன்னூரில்‌ நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்‌ கோவை சாக காவல்துறை துணைத்தலைவர்‌, நீலகிரி மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌, தடய அறிவியல்‌ நிபுணர்கள்‌ மற்றும்‌ இந்த விபத்து வழக்கின்‌ விசாரணை அதிகாரி உட்பட இதர காவல்‌ அதிகாரிகள்‌ கலந்து கொண்டனர்‌. இந்த ஆலோசனை கூட்டத்தில்‌ தடயவியல்‌ இயக்குனர்‌ அவர்களும்‌ விரிவான அறிவுரைகள்‌ மற்றும்‌ ஆலோசனைகள்‌ வழங்கினார்‌.

இது தொடர்பாக மேல்குன்னூர்‌ காவல்‌ நிலைய கு.எண்‌ 129/2021 பிரிவு 174 குவிமுச வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்து மாணிக்கம்‌ கூடுதல்‌ காவல்‌ கண்காணிப்பாளர் நீலகிரி மாவட்டம்‌ அவர்கள்‌, புலன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்‌. இதுவரை 26 சாட்சிகள்‌ விசாரிக்கப்பட்டுள்ளனர்‌.

சம்பவ இடத்திற்கு முதல்‌ முதலாக சென்று தீக்காயங்களுடன்‌ போராடிய நான்கு அதிகாரிகளை மீட்ட காவலர்‌ சிவா, முத்து மாணிக்கம்‌ கூடுதல்‌ காவல்‌ கண்காணிப்பாளர், துனைகாவல் கண்காணிப்பாளர் சசிகுமார்,‌ ஆய்வாளர்‌ பிரிதிவிராஜ்‌ சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி ஆகியோரை காவல்‌ துறை தலைமை இயக்குநர்‌ பாராட்டினார்‌.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...