திருப்பூரில் அரசியல் கட்சிகளை அவமரியாதை செய்ததாக ஆட்சியர் மீது அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு

திருப்பூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகளை அவமரியாதை செய்ததாக ஆட்சியர் மீது அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகளை அவமரியாதை செய்ததாக ஆட்சியர் மீது அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாநகராட்சி மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்த 10:30 -மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வாக்காளர் இறுதிப் பட்டியலை வெளியிடுவார் என அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனடிப்படையில் 10:30-மணிக்குள்ளாக ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வந்திருந்த நிலையில், அழைப்பு விடுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே மாவட்ட ஆட்சியர் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு விட்டுச் சென்று விட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதனால் அதிருப்தி அடைந்த அரசியல் கட்சியினர் இறுதி வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதைச் சுட்டிக் காட்ட இருந்த சூழ்நிலையில், அதைத் தவிர்ப்பதற்காகவே மாவட்ட ஆட்சியர் இது போன்ற செயலில் ஈடுபட்டதாகவும், இது கண்டிக்கத்தக்கது எனவும் இது அரசியல் கட்சியினரை அவமரியாதை செய்யும் போக்கு என குற்றம்சாட்டினர்.



இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...