ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு கிணத்துக்கடவில் இந்து முன்னணி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கோவை: இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு கிணத்துக்கடவில் இந்து முன்னணி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் 8-ம் தேதி வியாழக்கிழமை ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13-பேர் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.

வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், இன்று கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
பிபின் ராவத் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் வீரவணக்கமும் செலுத்தினர்.
இதில் இந்து முன்னணியின் கோவை கோட்ட செயலாளர் அசோக் குமார், பாஜக மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபாலகிருஷ்ணன், சுந்தரராஜ் மற்றும் அதிமுக நகர செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.