கோவையில் மத்திய மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு, தூய்மைப்பணிகள்‌ குறித்து ஆய்வு செய்தார்‌.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு, தூய்மைப்பணிகள்‌ குறித்து ஆய்வு செய்தார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.82 சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ தூய்மைப்‌ பணியாளர்களின்‌ பணிகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌‌, தூய்மைப்பணியாளார்களின்‌ வருகைப்‌ பதிவேடுகளை ஆய்வு செய்த பின்னர், தூய்மைப்பணியாளார்கள்‌ நேரம்‌ தவறாமல்‌ பணிக்கு வருகை தர வேண்டும்‌.



வீடுதோறும்‌ குப்பைகளைச் சேகரிக்கும்‌ போது மக்கும்‌ குப்பை, மக்காத குப்பை என தரம்‌ பிரித்துச் சேகரிக்க வேண்டும்‌. மழை வடிகால்‌ கால்வாய்களில்‌ அடைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி மழை நீர் தேங்காமல்‌ செல்லும்‌ வகையில்‌ கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும்‌.

மேலும்‌, கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களைத்‌ தவிர்க்கப் பொதுமக்களிடையே போதிய விழிப்புண்வினை ஏற்படுத்திட வேண்டும்‌. தூய்மையான மாநகராட்சியாகத் திகழ தங்களுடைய பணிகளைச் சிறப்பாகச் செய்திட வேண்டும்‌. அனைவரும்‌ முகக்கவசம்‌ அணிந்து பணியாற்ற வேண்டும்‌. கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும்‌ என தெரிவித்தார்‌.

மேலும்‌, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.82 வி.ஹெச்‌. சாலை, திருமால்‌ வீதியில்‌, தூய்மைப்பணியாளர்கள்‌ மக்கும்‌, மக்கா குப்பைகளைத் தரம்‌ பிரித்துச் சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டுவருவதைப் பார்வையிட்ட பின்னர்‌, சி.எம்‌.சி.காலனியில்‌ பொதுமக்களிடம்‌ ஆக்கிரமிப்பில்‌ உள்ள வீடுகளை காலிசெய்திட மாநகராட்சிக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமெனவும்‌, இப்பகுதியில்‌ தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின்‌ மூலம்‌ வீடுகள்‌ கட்டும்‌ பணிகள்‌ விரைவில்‌ தொடங்கப்படும்‌ எனவும்‌ அப்பகுதி பொதுமக்களிடம்‌ தெரிவித்த ஆணையாளர்‌‌, அப்பகுதி பொதுமக்களின்‌ குறைகள்‌ மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட பொறியாளாகள்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா அறிவுறுத்தினார்‌.

அதனைத்‌ தொடர்ந்து செய்தியாளர்கள்‌ சந்திப்பில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ தெரிவித்ததாவது,

“மழைக்காலம்‌ இன்னும்‌ முடியவில்லை நமது மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ தென்மேற்கு மற்றும்‌ வடகிழக்கு பருவ காலங்களில்‌ அதிகப்படியான மழை பெய்துள்ளது. தற்போது மாநகராட்சியில்‌ மேற்கொள்ளப்பட்டுவரும்‌ பணிகளைப்‌ பொறுத்தவரையில்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள சாலைகளில்‌ பேட்ச்‌ ஓக்‌ பணிகளும்‌, அதுபோல TURIP திட்டத்தின்கீழ்‌ ரூ.10.00 கோடிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கும்‌, TNSUDP திட்டத்தின்கீழ்‌ ரூ.34.00 கோடிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கும்‌ டெண்டா்‌ கோரப்பட்டுள்ளது.

மொத்தம்‌ 289 பணிகளுக்கு, சுமார்‌ 80 கிலோ மீட்டருக்கு மேல்‌ சாலை பணிகள்‌ மேற்கொள்ளப்படவுள்ளது. அதுபோல ரூ.20.00 கோடிக்கு தெருவிளக்குகள்‌ அமைக்கும்‌ பணிகளுக்கான டெண்டர்‌ பணிகளும்‌ நடைபெற்று வருகின்றன. இதுதவிர அரசு திட்டங்களில்‌ ரூ.200.00 கோடி மதிப்பிலான சாலைகள்‌ மற்றும்‌ இணைப்பு சாலை பணிகளுக்காகவும்‌, சூரிய மின்சக்தி (சோலார்‌ பிளாண்ட்‌) திட்டத்திற்காகவும்‌ அரசிடம்‌ கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ மசக்காளிபாளையம்‌ மாநகராட்சி நடுநிலைப்‌ பள்ளியில்‌ கூடுதல்‌ கட்டிடம்‌ கட்டுவதற்கும்‌, அதுபோல குளங்கள்‌ தூர்வாரும்‌ பணிகளுக்கும்‌ அரசிடம்‌ கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியை முதலமைச்சர் கோவை வ.உ.சி மைதானத்தில்‌ நடைபெற்ற அரசு விழாவில்‌ காசோலை வழங்கியுள்ளார்‌. அதற்கான பணிகள்‌ கூடிய விரைவில்‌ மேற்கொள்ளப்படும்‌” என மாநரகாட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்தார்‌.

இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையாளர்‌ எ.சங்கர்‌, உதவி செயற்பொறியாளர்‌ பிரபாகரன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ திருமால்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...