கிணத்துக்கடவில் மக்கள் தொடர்பு முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கிணத்துக்கடவு அருகே வடசித்தூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்-323 பயனாளிகளுக்கு ₹ 55.82 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே வடசித்தூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்-323 பயனாளிகளுக்கு ₹ 55.82 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த 2-ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாகப் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.



இதையடுத்து, இன்று கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்குட்பட்ட வடசித்தூர் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

தேர்தல் பிரிவின் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் அம்சவேணி, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, முகாமில் பெறப்பட்ட 410-மனுக்களில் உடனடியாக தீர்வு காணப்பட்டு 323-பயனாளிகளுக்கு 55-லட்சத்து 82-ஆயிரத்து 154-ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இந்த முகாமில் வழங்கப்பட்டது.

இந்த முகாமில் கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா, கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, திமுக மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...