அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்: அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் புகழாரம்

தமிழகத்தில் கடந்த 27-ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் 200-நாட்களில் ஒரு லட்சம் கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.



கோவை: தமிழகத்தில் கடந்த 27-ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் 200-நாட்களில் ஒரு லட்சம் கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

கோவை மாவட்ட கட்டுமான அமைப்புச்சார தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் G.முருகேசன், வெ.கிருஷ்ணசாமி கூறியதாவது:

தமிழக முதலமைச்சருக்குத் தமிழகத்தில் வாழ்கின்ற சுமார் 2 கோடிக்கு மேலுள்ள கட்டுமான அமைப்புச்சாரத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையையும் வாழ்வாதாரத் தையும் காப்பாற்றத் தொழிற்சங்கத்தின் சார்பில் ஒரு வேண்டுகோள்.

கடந்த 1995லிருந்து 2021 வரை 27 ஆண்டுகளாகத் தமிழகத்தில் எத்தனையோ முதல்வர்களைக் கண்டுள்ளோம். ஆனால் கட்டுமான அமைப்புச்சாரத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்வடிவம் கொடுத்து நல வாரியத்தில் நிதி ஆதாரத்தைக் கருத்தில் கொண்டு 27 ஆண்டுகளில் எந்த முதல்வரும் செய்யாத சாதனையாக 200 நாட்களில் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளார்.

மிகக் கடுமையான பணிச்சுமைக்கு மத்தியிலும் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் 150% நலத்திட்ட உதவிகளை உயர்த்தி வழங்கி முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி வள்ளலைப் போல எங்களின் தொழிலாளர்களின் வாழ்வுரிமை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையில் அக்கரைக் கொண்டு பன்முகத்தன்மையோடு நடந்து கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்குக் கோடான கோடி நன்றிகளைத் தொழிலாளர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்குத் தொழிலாளர் நலன் சார்ந்து ஒரு வேண்டுகோள். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நலத்திட்டத்திற்காக 60 வயது பூர்த்தியாகி ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம். இயற்கை மரணம். விபத்துமரணம். விபத்தில் ஊனமுற்றோர் அல்லது இயற்கையின் உபாதையால் ஊனமுற்றோர் ஓய்வூதியம் உள்ளிட்டவற்றைப் பெறமுடியாமல் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வாழ்வுரிமையை இழந்து தவித்து வருகின்றனர்.

இவ்வாறு தவிக்கின்ற தொழிலாளிக்கு உதவும் வகையில் நலவாரியத்தில் போதுமான அளவு நிதி உள்ளது. எனவே 1982 சட்டத்தின்படி 1994 திட்டப்படி தொழிலாளி போராடிப் பெற்ற உரிமையைக் காலதாமதமின்றி தொழிலாளர்களுக்கு நலவாரியத்தின் மூலம் பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

கட்டுமானம் வாரியத்தில் சுமார் Rs.4,250 கோடி. ஆட்டோ நல வாரியத்தில் சுமார் Rs.850 கோடி என அதிகளவு நிதியும் . வருவாயும் இருப்பதைப் போல் அமைப்புச்சாரத் தொழிலாளர்களுக்கும் நிதி ஆதாரத்தை உருவாக்கி நிரந்தரமாக அவர்களும் தங்குதடையின்றி வாழ்வுரிமையைப் பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளத் தொழிலாளர்களின் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு கட்டுமானம் அமைப்புச் சார தொழிலாளர் நல வாரியம் 1982ம் ஆண்டுச் சட்டம் 1994 தமிழ்நாடு கட்டுமான வாரியத்தை முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ. ஜெயலலிதா அவர்களும் 1999 ம் ஆண்டு மறைந்த முத்தஅமைப்புசார வாரியத்தை நலத்திட்டத்தை அறிவித்தார்.

அதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பலனடைந்து வந்தனர். இருந்தபோதிலும் இந்த திட்டத்தில் பயனடைந்தவர்களை விட புதுப்பிக்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி நலத்திட்ட உதவிகளையும் வாரிய பதிவையும் இழந்தவர்களே மிக அதிகம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக உறுப்பினர்கள் தங்களது பதிவைப் புதுப்பிக்கவும் திட்டங்களைப் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த பலனும் இல்லை இதனால் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எந்த நோக்கத்திற்காக மறைந்த தலைவர்களான முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா உள்ளிட்டோர் தொழிலாளர் நலத்துறை மூலமாகத் தொழிலாளர் நலவாரியத்தையும் நிதியாதாரத்தையும் உருவாக்கினார்களோ அந்த நோக்கமே தற்பொழுது வீணாகி உள்ளது.

தமிழக முதலமைச்சராக நீங்கள் பொறுப்பேற்ற பின் பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி பணியாற்றி வரும் போதிலும் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளின் அலட்சியபோக்கல் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் எந்த பயனையும் பெற முடியாத அவல நிலையில் தவித்துக் கொண்டு உள்ளனர்.

கடந்த 27 ஆண்டுகளாகப் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் தொழிலாளர்களின் உரிமையான ஓய்வு ஊதியம், மரணத்திற்கு நீதி உதவி என்பது உள்ளிட்ட நலவாரியத்தின் பலன்கள் கிடைக்கும் என காத்திருந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் ஏமாற்றமடைவது மிகவும் கவலையில் உள்ளனர்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விரைவில் அரசாணை வெளியிட வேண்டும் என்பதே அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறு G.முருகேசன், வெ.கிருஷ்ணசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...