கிணத்துக்கடவு பகுதியில் கல்குவாரி உரிமையை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சார் ஆட்சியரிடம் மனு..!

தினமும் கல்குவாரியில் வெடி வைப்பதால் விவசாய பூமியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் அதிர்வு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் கல்குவாரி உரிமையை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பெரிய கவுண்டனூர், நல்லி கவுண்டன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்.

தேவராயபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய பூமிகள் கல் குவாரி இயங்கி வருகிறது. தினமும் 100க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கல்லுடைத்து கேரளா மாநிலத்திற்குக் கொண்டு செல்கின்றனர்.

தினமும் கல்குவாரியில் வெடி வைப்பதால் விவசாய பூமியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் அதிர்வு ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக வெடி வைத்து தகர்த்து அழித்து வருகின்றனர்.

இதனால், கிணற்று நீர் மட்டம் குறைந்து விவசாய பூமியில் ஆடுமாடுகள் கூட வளர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது எனவும், விவசாயத்தை மட்டும் நம்பி உள்ளதாகவும், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் கிணற்றில் தண்ணீர் வற்றி விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், குவாரியில் வெடி வைக்கும் பொழுது ஏற்படும் புகை மண்டலத்தால் காசு மாற்றம் ஏற்படுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகிறோம். ஆகவே, கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யுமாறு விவசாயிகள் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...