காட்டு யானைகளை குடியிருப்புக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே நியாயவிலைக் கடைகளை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகளால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், வால்பாறை அருகே நேற்று இரவு முடிஷ் பகுதியிலுள்ள ரோஜா நியாய விலை கடையை 7 காட்டு யானைகள் அப்பகுதிக்கு வந்து ஜன்னல், கதவு போன்றவற்றை உடைத்து சுமார் ஆறு மூட்டை அரிசி மற்றும் கோதுமை சர்க்கரையை சாப்பிட்டு, பொருட்களை உடைத்து சென்றது.

இந்த சம்பவம் தகவல் அறிந்து வந்து வனத்துறையினர் யானைகளை அப்பகுதியில் இருந்து விரட்டினர்.
இந்த நிலையில், யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காட்டு யானைகளை குடியிருப்புக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.