குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைத் தலைமை தளபதியின் திருவுருவப் படத்திற்கு பொள்ளாச்சி காங்கிரசார் அஞ்சலி..!

பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பாக வைக்கப்பட்டிருந்த பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு காங்கிரசார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


கோவை: குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைத் தலைமை தளபதி மற்றும் ராணுவ வீரர்களுக்கு பொள்ளாச்சியில் காங்கிரசார் அஞ்சலி செலுத்தினர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் ராணுவ முப்படைத் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், விபத்தில் மரணமடைந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களுக்கு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பாக வைக்கப்பட்டிருந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு காங்கிரசார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காங்கிரஸ் குழு தலைவர் என். கே. பகவதி, மாவட்ட துணைத் தலைவர் சிற்பி ஜெகதீசன், மாவட்ட பொதுச்செயலாளர் மோகன் ராஜ், லூயிஸ், நகரத் தலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர்கள் கருணை மகாலிங்கம், ஜவஹர் பாண்டியன், தங்கவேல், நகரத் துணைத் தலைவர் பாண்டியன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...