பொள்ளாச்சி அருகே போலீசார் நடத்திய தீவிர கண்காணிப்பில் 1050 கிலோ ரேஷன் அரிசி மற்றும் குட்கா பறிமுதல்..!

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 1,050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே போலீசார் நடத்திய தீவிர கண்காணிப்பில் 1050 கிலோ ரேஷன் அரிசி மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு குட்கா மற்றும் பான் மசாலா, ரேஷன் அரிசி மற்றும் போதை வஸ்துகள் கடத்த முயற்சிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நபர்களை தீவிரமாக கண்காணிக்க ஆணை பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து, கோவை மாவட்டம் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி பொள்ளாச்சி, ஆனைமலை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நடுப்புணி, கோபாலபுரம், கோவிந்தாபுரம், செமனபதி, காளியாபுரம், ஜமீன் காளியாபுரம் பகுதிகளில் சோதனைச் சாவடிகளில் போலீசார் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில், பான்பராக் குட்கா விற்பனை செய்யும் கடைகளில் கண்காணித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், வடக்கிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி வாகன சோதனையின் போது, சோதனை சாவடியில் நிற்காமல் சென்றது. இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் காரை பின் தொடர்ந்து போது காரை நிறுத்திவிட்டு மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர், காரை பறிமுதல் செய்த போலீசார், சோதனையில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது. கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 1050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், கேரளாவுக்கு கடத்திய நபர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அதேபோல, மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் முரளி, மகாலிங்கபுரம் உதவி ஆய்வாளர் கௌதம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெட்டிக் கடைகளில் உதவி ஆய்வாளர் நடத்திய தீவிர சோதனையில் 35 பாக்கெட்டுகள் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து மணிகண்டன், ராஜன், ராதாகிருஷ்ணன் மூவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...