ஹெலிகாப்டர் விபத்து; வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் 13 ராணுவ வீரர்களின் உடலுக்கு தமிழிசை செளந்தரராஜன் அஞ்சலி..!

ஹெலிகாப்டர் நொறுங்கி முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி நெஞ்சையே நொறுக்கிவிட்டதாக இரங்கல் தெரிவித்தார்.



நீலகிரி: வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் 13 பேரின் உடலுக்கு புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.



நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள 13 பேரின் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.



இதனிடையே, தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இராணுவ வீரர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.



அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்தது நெஞ்சை அடைக்கிறது. அவருக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வந்துள்ளேன். ஒரு மருத்துவராக, சிகிச்சை பெற்று வரும் விமானி வருணைப் பார்வையிட்டேன். அவரது உள்ளுறுப்புகள் சீராக செயல்பட்டு வருகிறது. இளைஞர்கள் இந்த நேரத்தில் தேசப்பற்றுடன் இருக்க வேண்டும். விமானி வருணின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...