கோவை அருகே ரேஷன் கடை கதவுகளை உடைத்து பொருட்களை சேதப்படுத்திய 4-காட்டுயானைகள்!

கோவை அருகே 4-காட்டுயானைகள் ரேஷன் கடை கதவுகளை உடைத்து உணவு பொருட்களை சேதப்படுத்தி வெளியே தூக்கி வீசி நாசப்படுத்தியதால், பொருட்கள் விநியோகம் பாதிப்படைந்தது.


கோவை: கோவை அருகே 4-காட்டுயானைகள் ரேஷன் கடை கதவுகளை உடைத்து உணவு பொருட்களை சேதப்படுத்தி வெளியே தூக்கி வீசி நாசப்படுத்தியதால், பொருட்கள் விநியோகம் பாதிப்படைந்தது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தி வருகிறது.

இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் தொடர்ந்து யானைகள் ஊருக்குள் வந்து பொருட்களைச் சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது.

கோவையை அடுத்த நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் வரப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்குக் கொடுப்பதற்காக அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் மூட்டைகளிலிருந்தன.

இந்த நிலையில், இன்று அதிகாலை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மலையடிவார வனப்பகுதியை விட்டு வெளியேறிய 4-காட்டு யானைகள் வரப்பாளையம் கிராமத்துக்குள் புகுந்தது. நேராக அந்த பகுதியிலிருந்த ரேஷன் கடைக்கு சென்ற 4-காட்டு யானைகள் ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தன.

பின்னர் கடைக்குள் இருந்த ரேஷன் அரிசி சர்க்கரை பருப்பு உள்ளிட்ட மூட்டைகளைத் தூக்கி அங்கும் இங்கும் வீசின. மேலும் மூன்று மூட்டைகளைத் தூக்கி சாலையில் வீசி எறிந்த யானைகள் பின்னர் அதனை உண்டு காலால் சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது ரேஷன் கடை உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தன.

உடனடியாக ஊராட்சி தலைவர் கார்த்தி கேஸ்வரி சுந்தர்ராஜ் சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையைப் பார்வையிட்டு அங்கு இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் அந்த பகுதி முழுவதும் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த நடமாட்டத்தைக் கண்காணித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...