குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை முடித்து தனியார் விடுதிக்கு கிளம்பினார்

மூத்த இராணுவ அதிகாரிகள், நீலகிரி ஆட்சியர் அம்ரீத் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் 15 நிமிடங்கள் ஆலோசனையை முதல்வர் மேற்கொண்டார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிலையில் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து நேரில் விவரம் அறிய முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு கோவை வந்தார். பின்பு சாலை வழியாக குன்னூர் சென்றார்.



பின்னர், அங்கு மூத்த இராணுவ அதிகாரிகள், நீலகிரி ஆட்சியர் அம்ரீத் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் 15 நிமிடங்கள் ஆலோசனையை முதல்வர் மேற்கொண்டார்.



பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்ற முதல்வர் குன்னூரில் உள்ள தனியார் விடுதியில் ஒய்வு எடுக்க கிளம்பினார்.

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...