உண்மையான தேசபக்தரை இழந்து விட்டோம்... பிபின் ராவத் மரணம்: பிரதமர் இரங்கல்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிபின் ராவத்தின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. பிபின் ராவத் நாட்டுக்கு ஆற்றிய சேவையை இந்தியா ஒருபோதும் மறக்காது எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


டெல்லி: முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கலை தெரிவித்துள்ளார்.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து, நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் ராணுவ பயிற்சி பள்ளிக்கு ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் சென்றனர்.

அப்போது, காட்டேரி மலைப் பாதையில் அவர்கள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்ட முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 63. அவர் உயிரிழந்த தகவல் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபின் ராவத்துடன் பயணித்த அவரது மனைவி உள்பட 13 பேரும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறந்த ராணுவ வீரர். ஒரு உண்மையான தேசபக்தரான அவர், நமது ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு எந்திரங்களை நவீனமயமாக்குவதில் பெரிதும் பங்களித்தார். மூலோபாய விஷயங்களில் அவரது நுண்ணறிவு மற்றும் முன்னோக்குகள் விதிவிலக்கானவை. அவரது மறைவு என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...