கிணத்துக்கடவில் 15- வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

கிணத்துக்கடவு பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு வந்த வாலிபர், 15- வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கிணத்துக்கடவு பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு வந்த வாலிபர், 15- வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் ஆழியாறு புளியங்கண்டி விநாயகர் கோவில் வீதி சேர்ந்தவர் கோபிநாத் (வயது 21). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிணத்துக்கடவு பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்காக உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த 15 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதில் தற்போது அந்த 15 வயது சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தன்னை கட்டாயப்படுத்தி ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கப் புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய கோபிநாத்தைக் கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...