கிணத்துக்கடவில் தந்தை அடித்து துன்புறுத்தி வருவதாக இரண்டு சிறுமிகள் புகார்

கிணத்துக்கடவு பகுதியில் தந்தை அடித்துத் துன்புறுத்தி வருவதாகப் புகார் தெரிவித்த இரண்டு சிறுமிகளை மீட்டு சைல்டு லைன் உறுப்பினர் நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: கிணத்துக்கடவு பகுதியில் தந்தை அடித்துத் துன்புறுத்தி வருவதாகப் புகார் தெரிவித்த இரண்டு சிறுமிகளை மீட்டு சைல்டு லைன் உறுப்பினர் நடவடிக்கை எடுத்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் 10 மற்றும் 9 வயதான இரண்டு மகள்களைத் தந்தை அடித்துத் துன்புறுத்தி வருவதோடு, சரியான முறையில் உணவும் வழங்கப்படுவதில்லை என கோவை மாவட்ட சைல்டு லைன் அதிகாரிகளுக்கு நேற்று மாலை புகார் வந்துள்ளது.

இதையடுத்து இன்று சைல்டு லைன் உறுப்பினர் கல்பனா மற்றும் கிணத்துக்கடவு காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்ததில் 2 மகள்களையும் தந்தை அடித்துத் துன்புறுத்தி வருவது தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு சிறுமிகளை மீட்ட சைல்டு லைன் உறுப்பினர் கல்பனா, கோவை உக்கடம் பகுதியில் உள்ள குழந்தை நல மையத்தில் ஆஜர்படுத்தி, காப்பகத்தில் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...