சசிகலா, ரஜினிகாந்த் சந்திப்பின் பின்னணி? திருப்பூரில் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆருடம்

ரஜினிகாந்த் சசிகலா சந்திப்பு குறித்துப் திருப்பூரில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன் சன் டிவி ரஜினியை வைத்து படம் எடுத்தது போல, ஜெயா டிவி ரஜினியை வைத்து படம் எடுக்கப் போகிறார்களோ அல்லது இருவரும் ஒரு சேர பாஜகவில் இணைய நினைக்கிறார்களோ என பேட்டியளித்தார்.


திருப்பூர்: ரஜினிகாந்த் சசிகலா சந்திப்பு குறித்துப் திருப்பூரில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன் சன் டிவி ரஜினியை வைத்து படம் எடுத்தது போல, ஜெயா டிவி ரஜினியை வைத்து படம் எடுக்கப் போகிறார்களோ அல்லது இருவரும் ஒரு சேர பாஜகவில் இணைய நினைக்கிறார்களோ என பேட்டியளித்தார்.



இந்துக்கள் புனிதஸ்தலமாக கருதிய காசி கோவில் ஆக்கிரமிப்பாளர்களால் சிதைக்கப்பட்டது. இன்று பல லட்சம் சதுர அடியில் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது. சிவாஜி மகாராஜாவிற்குப் பிறகு தேசத்தின் தன்மானத்தை உயர்த்தி பிடிப்பவராகப் பிரதமர் மோடி உள்ளார். யாரின் மனதும் புண்படாமல் இந்து மக்களின் தன்மான உணர்வை உயர்த்தி பிடித்துள்ளார். காசியில் 13, 14 தேதிகள் விழாக்கோலம் பூணும் நாளாக அமைய உள்ளது

இந்தியத் தேசம் உலகம் முழுவதும் உள்ள தலைவர்களால் விரும்பப்படும் தேசமாக மாறி உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா என்ற இரு பெரும் வல்லரசு நாடுகளுடன் இணக்கமாக இருக்கம் புதிய உலக சக்தியாக இந்தியாவை மாற்றி உள்ளார். அண்டை நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் ஆணவப் போக்குக்கு முற்றுப் புள்ளி வைக்கம் நிகழ்வாக ரஷ்ய பிரமருடன் இந்தியப் பிரதமர் சந்திப்பு நிகழ்ச்சி அமைந்துள்ளது‌.

தை ஒன்றில் தான் மகளிருக்குத் தனி பார் திறக்க போகிறார்களா? தமிழ் மக்கள் போதையிலிருந்து வெளிவந்தவராக இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் தான் தமிழ் கலாச்சாரத்தின் ஆணி வேர். அதன் மீது வெந்நீர் ஊற்றும் விதமாக மகளிருக்குத் தனி பார் என்பது தமிழ் கலாச்சாரமா? வள்ளுவர் கலாச்சாரமா? இவர்கள் ஒரு போதும் தமிழர்கள் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்க போவதில்லை என்பதை இவர்களின் ஒவ்வொரு முடிவும் எடுத்து காட்டுகிறது.

எப்படியோ ஆட்சிக்கு வந்து விட்டார்கள். ஆட்சிக்கு வந்த பின்பாவது சிறப்பாக ஆட்சி நடத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்க வேண்டும். ஆனால் மகளிருக்குத் தனி பார் என்பது எந்த ஒரு தமிழர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாத முடிவாக உள்ளது.

இருவிதமான தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளது. ஒமைக்ரான் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. எப்படி கொரோனாவை மோடி தலைமையில் தேசம் எதிர்கொண்டதோ. அதே போல் மீண்டும் இக்கட்டான நிலை வந்தாலும் அதற்கு மாற்றை கண்டறியும் வகையில் பிரதமர் மோடி விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தி உறுதுணையாக இருந்து வருகிறார் அது எவ்வளவு பெரிய இடரில் இருந்தும் இந்தியாவைக் கட்டிக் காக்கும்.

ரஜினிகாந்த் சசிகலா சந்திப்பு பற்றி குறிப்பிட்ட அவர், சன் டிவி தான் ரஜினியை வைத்து படம் எடுத்தார்கள் இனி ஜெயா டிவி ரஜினியை வைத்து படம் எடுக்குமோ என்ற எண்ணம் தான் எங்களுக்கு எழுந்துள்ளது. தமிழகத்தின் எதிர்காலம் பாஜக தான் என்ற அடிப்படையில் சசிகலாவும் ரஜினிகாந்த்தும் ஒரு சேர பாஜகவில் இணைய நினைக்கிறார்களோ என்னவோ என தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...