வால்பாறையில் அரசு கலைக் கல்லூரி வளாகத்திற்கு முன் சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்..!

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவி வரும் நிலையில், சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை வால்பாறை டவுன் பகுதியில் அரசு கலைக் கல்லூரி வளாகத்திற்கு முன் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தைகள், காட்டு மான்கள், காட்டெருமைகள், சிங்கவால் குரங்குகள் போன்றவை வாழ்ந்து வருகிறது.

இதில் யானைகள், சிறுத்தைகள், சிங்கவால் குரங்குகள் போன்றவை வால்பாறை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.



இதனிடையே, நேற்று இரவு வால்பாறை மையப்பகுதியான அரசு கலைக் கல்லூரி முன்பு பிரதான சாலையில் சிறுத்தை ஒன்று குடியிருப்புக்குள் இருந்து வெளியேறி எந்தவித பயமுமின்றி நடந்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது.

இந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிகழ்வு அனைத்து சம சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...