உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ ரூ.62.17 கோடி மதிப்பீட்டில்‌ வளர்ச்சிப்பணி: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி சீர்மிகு நகரத்‌ திட்டத்தின்கீழ்‌ உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ பகுதி-1ன்‌ கீழ்‌ ரூ.62.17 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ வளர்ச்சிப்பணியை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில்‌ நடைபெற்றுவரும்‌ வளர்ச்சி திட்டப்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ திரு.ராஜ கோபால்‌ சுன்கரா இன்று 08.12.2021 நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி சீர்மிகு நகரத்‌ திட்டத்தின்கீழ்‌ உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ பகுதி- lன் கீழ்‌ ரூ.62.17 கோடி மதிப்பீட்டில்‌ வளர்ச்சிப்பணிகள்‌ நடைபெற்றுவருகிறது. இதில்‌ மிதிவண்டிப்பாதை, குளக்கரையினை அழகுபடுத்துவதற்காகக் குளம்‌ புனரமைத்தல்‌ மற்றும்‌ சீரமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதைப் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌, பணிகளைத் தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்டார்‌.



பின்னர், உக்கடம்‌ பெரியகுளம்‌ பகுதியில்‌ நீர் சுத்திகரிப்பு நிலையம்‌ கட்டுமானப்‌ பணிகளையும்‌, உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ உபரிநீர்‌ வெளியேறி நொய்யல்‌ ஆற்றில்‌ கலக்கும்‌ பகுதியினை நேரில்‌ சென்று ஆய்வு செய்தார்‌.



அதன்‌ பின்னர்‌, இன்று அதிகாலை மத்திய மண்டலம்‌ பூமார்க்கெட்‌ அருகில்‌ உள்ள தேவாங்க பேட்டை முதல்‌ வீதியில்‌ அதிக பாரம்‌ ஏற்றி வந்ததால்‌ செங்கல்‌ லாரி பாதாளச் சாக்கடையில்‌ ஏற்பட்ட விபத்தினை நேரில்‌ பார்வையிட்டு, செங்கல்‌ லாரியை உடனடியாக அப்புறப்படுத்தச் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

மேலும்‌, அப்பகுதியில்‌ விபத்து ஏற்படுத்திய செங்கல்‌ லாரியை அப்புறப்படுத்திய பின்னர் சேதமடைந்த பாதாளச் சாக்கடையை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌‌ பொறியாளாகளுக்கு உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வின்போது, தெற்கு மண்டல உதவி ஆணையாளர்‌ அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்‌ கருப்புசாமி, உதவி செயற்பொறியாளர்‌ (பாதாள சாக்கடை திட்டம்‌) உமாதேவி, மண்டல சுகாதார அலுவலர்கள்‌ ராமு, சண்முகசுந்தரம்‌, உதவி பொறியாளர்கள்‌ சரவணகுமார்‌, பிரபாகரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.



"கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.32க்குட்பட்ட விளாங்குறிச்சி, சேரன்மா நகர் பகுதிகளில்‌ வீடுவீடாகச்‌ சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளான அபேட்‌ மருந்தைத் தொட்டிகளில்‌ ஊற்றுவது, கொசுப்புகை மருந்து அடிப்பது, தேவையற்ற பொருட்களை அகற்றுவது போன்ற பணிகளில்‌ மாநகராட்சி சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...