வால்பாறை அருகே 2 வயது ஆண் குட்டி யானை உயிரிழப்பு..!

குட்டி யானை குடல் புண் ஏற்பட்டு சாப்பிட முடியாமல் உயிரிழந்துள்ளதாக உடற்கூறு ஆய்வு செய்த வனத்துறை மருத்துவர் தெரிவித்தார்.


கோவை: கோவை வால்பாறை அருகே 2 வயது ஆண் குட்டி யானை இறந்தது தொடர்பாக மானாம்பள்ளி வனச்சரக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. காட்டு யானைகள் வனப் பகுதியிலிருந்து கூட்டங்கூட்டமாக குட்டியுடன் தேயிலைத் தோட்டத்தில் உலாவி வருகிறது. இரவு நேரத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடியிருப்பு வழியாக செல்கிறது.

இந்நிலையில், தோனி முடி எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் 13 காட்டு யானைகள் கடந்த இரண்டு தினங்களாக குட்டியுடன் சுற்றித் திரிந்தது. அதில் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு தேயிலைத் தோட்டத்தில் இறந்து இருந்தது.

இரவு நேரத்தில் காட்டு யானைகள் வனப்பகுதிக்குச் சென்று விட்டதால், இறந்த நிலையில் குட்டியானை இருப்பதை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



பின்னர், வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து வனத்துறை வனச்சரகர் மணிகண்டன் தலைமையில், வனத்துறை மருத்துவர் சுகுமார் முன்னிலையில் குட்டி யானையை ஆய்வு செய்து பார்த்தனர்.



குட்டி யானை குடல் புண் ஏற்பட்டு சாப்பிட முடியாமல் இருந்த நிலையில் இறந்து உள்ளதாக தெரிய வந்தது.

இதையடுத்து, யானையை உடற்கூறு ஆய்வு செய்து வனத்துறை அதிகாரி செல்வம், மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், வனத்துறை மருத்துவர் சுகுமார் ஆகியோர்கள் முன்னிலையில் மண்ணில் புதைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...