பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் வருமானவரி அதிகாரி எனக்கூறி 10 பவுன் நகையை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மங்கலம் சாலை கருவம்பாளையம் திருநகரை சேர்ந்தவர் கீதா (52). இவர் நேற்று முன்தினம் காய்கறி வாங்க அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை குறுக்கிட்டு பேசிய நபர் தன்னை வருமான வரித்துறை அதிகாரி என கூறி அறிமுகமானார். சற்று தள்ளி டூவீலரில் நின்றிருந்த நபரிடம் கீதாவை அழைத்துச் சென்று இப்பகுதியில் திருட்டு அச்சம் இருப்பதால் தங்க நகையை அணிந்து செல்ல வேண்டாம் என கூறி நகையை கழற்றி பரிசீலிக்குமாறு அந்த நபர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனை நம்பிய கீதா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை கழற்றி பர்சில் வைக்க முயன்றார்.
அப்போது, மர்ம நபர்கள் இருவரும் கீதாவிடம் பர்சை வாங்கி நகையை வைத்து கொடுத்தனர். அதன் பின்னர் வீட்டுக்குச் சென்ற கீதா பர்சை திறந்து பார்த்தபோது 10 பவுன் நகை இல்லை.
இதையடுத்து, கீதா அளித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.