சமையலர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு ரத்து - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தகவல்..!

நிர்வாக காரணங்களால் சமையலர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வுப் பணிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.


கோவை: திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் சு.வினீத் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில் 33 சமையலர்கள் (18 ஆண்கள், 15 பெண்கள்) பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி முதல் 13ம் தேதி வரை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது.

ஆனால், மாநில அளவிலான தேர்வுக்குழுவால், இறுதி செய்யப்படாமல் தேர்வுப் பணிகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பெறப்பட்ட பணிநாடுநர் பட்டியல் மற்றும் பொது விளம்பரம் மூலம் பணி நாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு 6 மாதங்கள் கடந்துவிட்டன.

இதன் காரணமாகவும், நிர்வாக காரணங்களாலும் மேற்படி சமையலர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வுப் பணிகள் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...