பள்ளி, கல்லூரி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதை உடனே ஒழிக்க வேண்டும் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு..!

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களை கொண்டு காவல் ஆய்வாளர் வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்கி ரகசிய தகவல் சேகரித்து விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க உத்தரவிட்டுள்ளார்.


கோவை: பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனையை ஒரு மாதத்தில் ஒழிக்க அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு, காவல்துறை இயக்குநர் உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க, 6.12.2021 முதல் 6.1.2022 வரை ஒரு மாத காலம் கஞ்சா மற்றும் லாட்டரி வேட்டை நடத்த வேண்டும்.

அதன்படி, கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை செய்பவர்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

அதேபோல, கஞ்சா மற்றும் குட்கா கடத்தல், பதுக்கல், விற்பனை சங்கிலியை உடைக்க மொத்த கொள்முதல், விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கஞ்சா, குட்கா, லாட்டரி பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களை அடையாளம் கண்டு மனநல ஆலோசகர் மூலம் மீட்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களை கொண்டு காவல் ஆய்வாளர் வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்கி ரகசிய தகவல் சேகரித்து விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

ஆந்திரா மாநிலத்தில் பயிரிடப்படும் கஞ்சா பயிரை ஒழிக்க ஆந்திரா போலீசாருடன் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை மாநில போதைத் தடுப்பு பிரிவு முன்னின்று செயல்படுத்த வேண்டும்.

ரயில்வே காவல்துறையினர் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கஞ்சா, குட்கா, லாட்டரியை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

இந்த ஒரு மாதத்துடன் இந்த நடவடிக்கை நின்றுவிடாமல் காவல் நிலைய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர்களுக்கு கஞ்சா, குட்கா, லாட்டரி குற்றவாளிகளை கண்காணிக்கும் பொறுப்பு அளித்து தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பணியினை சென்னை காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் இயக்குநர் ஆகியோர் தினமும் கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...