கோவை ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 65 லட்சம்..!

நிரந்தர உண்டியல் காணிக்கையாக ரூ. 46 லட்சத்து 70 ஆயிரத்து 145, தட்டு காணிக்கையாக ரூ.18 லட்சத்து 33 ஆயிரத்து 317 மற்றும் 195 கிராம் தங்கம், 497 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி ஆனைமலையில் புகழ்பெற்ற மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 65.03 லட்சத்தை பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

கோவை மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் ஒன்று. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், பக்தர்கள் காணிக்கை செலுத்த கோயில் வளாகத்தில் நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, ஒவ்வொரு மாதமும் காணிக்கை எண்ணப்படும். இதில்,

ஈச்சனாரி விநாயகர் கோயில் உதவி ஆணையர் ஆனந்த், மருதமலை முருகன் கோயில் தக்கார் விமலா, மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் கருணாநிதி, இந்து சமய அறநிலையத் துறை ஆனைமலை பகுதி ஆய்வாளர் குறிச்சி செல்வி ஆகியோர் முன்னிலையில் இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், சலவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நிரந்தர உண்டியல்

காணிக்கையாக ரூ. 46 லட்சத்து 70 ஆயிரத்து 145, தட்டு காணிக்கையாக ரூ.18 லட்சத்து 33 ஆயிரத்து 317 மற்றும் 195 கிராம் தங்கம், 497 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...