கோவையில் 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலி..! வீடுகள் தோறும் காய்ச்சல் பரிசோதனை தீவிரம்..!!

மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று காய்ச்சல் மாத்திரைகள் மற்றும் டெங்கு விழிப்புணர்வு குறித்து மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவையில் 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று காய்ச்சல் மாத்திரைகள் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழை காரணமாக கோவை மற்றும் சுற்று பகுதிகளில் மழைநீர் தேக்கம் அடைந்து வருவதால், டெங்கு மற்றும் நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்தில் கோவை மாவட்டத்தில் குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் டெங்கு மற்றும் பிற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பொள்ளாச்சி அருகே பெரிய நெகமம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் திடீரென காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், சிறுவனின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்த போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகளின் உத்தரவுபடி பெரிய நெகமம் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இதன் எதிரொலியாக, கோவையில் மழைக்கால தொற்று தடுப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது, அவ்வப்போது மழை பெய்து வருவதால், மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க வீடுகள், நிறுவனங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் நாள்தோறும் ஆய்வு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய சூழலில் வரும் காய்ச்சல் பாதிப்புகள் அனைத்துமே டெங்கு பாதிப்பு இல்லை என்றும் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது சற்றே அதிகரித்துள்ளது என்பதால், இதற்காக பல்வேறு இடங்களில் மழைக்கால நோய் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வீடுகள் தோறும் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை செய்து, பாதிப்பு உள்ளவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேபோல மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. தங்களது பெற்றோரிடமும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், வீடுகள் அருகே மழைநீர் தேங்க விடக்கூடாது எனவும் மாணவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்று தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...