கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கைது..!

அரியர் தேர்வு முடிவுகள் அதிருப்திக்கு காரணமாக பேச்சு வார்த்தைக்கு அழைத்த, பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்க மறுப்பு.


கோவை: கோவை மருதமலை சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. போராட்டத்தை கைவிடும்படி போலீசார் அறிவுறுத்தியும், மாணவர்கள் போராட்டத்தில் தொடர்ந்ததால், போலீசார் அவர்களை கைது செய்தனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உறுப்பு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் இளங்கலை மாணவ, மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் அரியர் தேர்வு ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானதை அடுத்து, தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 80 சதவீதம் பேர் தேர்வில் தோல்வி அடைந்ததாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



மாணவர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த கல்லூரி நிர்வாகம், அரியர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், வேளாண் பல்கலைக்கழகம் முன்பாக கடந்த 4 ஆம் தேதி மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் மாணவ, மாணவியர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் இடையே பிரச்சினை குறித்தான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, மாணவர்கள் இன்று மாலை பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர், இரவு 10 மணியை கடந்த போதிலும் மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்து வந்ததால், காவல் துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், 7 மாணவர்களை காவல்துறையினரால் கைது செய்தனர்.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்க செயலாளர் தினேஷ் ராஜா கூறுகையில், ‘‘கடந்த 2019ஆம் ஆண்டு அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த ஆண்டுதான் தேர்வு நடைபெற்றது. செய்முறை தேர்வு கல்லூரிகளில் தான் நடத்தப்பட்டது, அதிலும் முறைகேடுகள் நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் பேர் தேர்வு எழுதி உள்ள நிலையில், மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகம் உடனடியாக மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியர் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். இதுதொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததன் காரணமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம்,’’ என்றார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...