கிணத்துக்கடவில் மது குடித்துவிட்டு பரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு

கிணத்துக்கடவு சிங்கையன்புதூரில் மது குடித்துவிட்டு பரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு சிங்கையன்புதூரில் மது குடித்துவிட்டு பரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



புதுக்கோட்டை மாவட்டம் அகத்தியர் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா (வயது 22) என்பவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சிங்கையன்புதூர் பகுதியில் டாஸ்மாக் கடை மதுபான பாரில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு மது அருந்திவிட்டு பரோட்டா சாப்பிட்டதாகத் தெரிகிறது. பின்னர் தூங்கச் சென்ற கார்த்திக் ராஜா நள்ளிரவில் வாந்தி எடுத்ததை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் கார்த்திக் ராஜா உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து, கார்த்திக் ராஜாவின் உறவினர் தினேஷ் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில், அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் ராஜா உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...