10-ஆண்டுகளாக எப்படி இருந்தீர்கள்..? போலீஸ் மீது கோபமடைந்த எஸ்.பி.வேலுமணி

10-ஆண்டுகளாக எப்படி இருந்தீர்கள் எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள் அஞ்சமாட்டோம். காவல்துறை நடு நிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.


கோவை: காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்குப் போடுவதாகவும், நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.



கோவை மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ,.க்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-



திமுக ஆட்சிக்கு வந்து 6-மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால் சொன்னதை எதுவும் செய்யாமல் வெறும் விளம்பரத்தை வைத்து ஆட்சி செய்கின்றனர். நாங்கள் ஆளும் கட்சியாக இருந்த போது எந்த கட்டப்பஞ்சாயத்தும் இல்லை. ஆனால் இன்று அப்படி இல்லை. சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் என் மீது பழி போடுகிறார். நாங்கள் ஆட்சியிலிருந்த போதும் பல இயற்கை சீற்றங்கள் வந்தது. அப்போது மக்களை நேரடியாகச் சந்தித்து களப்பணியாற்றினோம்.



இப்போது, அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். காவல்துறையை நாங்கள் தொந்தரவு செய்யவில்லை. இன்று தொட்டதற்கெல்லாம் வழக்குப் போடுகின்றனர். 10 ஆண்டுகளாக எப்படி இருந்தீர்கள் எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள் அஞ்சமாட்டோம். காவல்துறை நடு நிலையோடு நடந்து கொள்ள வேண்டும். அதிகபட்சமாக டிரேன்ஸ்பர் செய்வார்கள் அவ்வளவு தானே. சட்டம் ஒழுங்கு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக நியாயமாக இருக்கிறோம்.

நாங்கள் கொடுத்த திட்டங்களை திமுக நிறுத்தி வைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். சென்னையில் நாங்கள் தொடங்கிய வேலைகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. முழுமையாக வேலைகள் முடிக்கும் போது தண்ணீர் தேங்காது.

கோவையில் 300 பணிகள் நிறுத்தி வைத்துள்ளனர். நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டம் மூலம் பணிகளை மீண்டும் துவங்க வைக்க வேண்டும். கொள்ள வேண்டும். அதிகபட்சமாக டிரேன்ஸ்பர் செய்வார்கள் அவ்வளவு தானே. சட்டம் ஒழுங்கு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக நியாயமாக இருக்கிறோம்.



நாங்கள் கொடுத்த திட்டங்களை திமுக நிறுத்தி வைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். சென்னையில் நாங்கள் தொடங்கிய வேலைகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. முழுமையாக வேலைகள் முடிக்கும் போது தண்ணீர் தேங்காது.

கோவையில் 300 பணிகள் நிறுத்தி வைத்துள்ளனர். நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டம் மூலம் பணிகளை மீண்டும் துவங்க வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...