பொள்ளாச்சியில் பைக் மோதி வடமாநில தொழிலாளி பலி

பொள்ளாச்சி அருகே பைக் மோதியதில் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்த வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பைக் மோதியதில் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்த வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோகன்மஜி(20). இவர் வேட்டைக்காரன்புதூர் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேட்டைக்காரன்புதூர்-சேத்துமடை ரோடு அருகே உள்ள கோழிப்பண்ணை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னாலிருந்து வந்த இருசக்கர வாகனம் மோகன் மஜி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இருசக்கர வாகனத்தில் வந்து விபத்து ஏற்படுத்திய சரலப்பதியை சேர்ந்த ரமேஷ்(22) என்பவர் மீது, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...