நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பொறுப்பாளர்கள்: மக்கள் நீதி மய்யம் பணிக்குழு அமைப்பு

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மாநிலத் தேர்தல் தலைமைப் பணிக்குழு மற்றும் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூர் மற்றும் கோவைக்கு, மாநில செயலாளர் (தலைமை நிலையப் பரப்புரையாளர்) பொறுப்பு அனுஷாரவிக்கு வழங்கப்பட்டுள்ளது.



கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மாநிலத் தேர்தல் தலைமைப் பணிக்குழு மற்றும் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பணிக்குழுவை மக்கள் நீதி மய்யம் அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நகாப்புற உள்ளாட்சிகளை வலுவாக்கும்‌ முழுமையான மாநில சுயாட்சியை உறுதிப்படுத்துவது, மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ பிரதான இலட்சியங்களில்‌ ஒன்று. இதன்‌ அடிப்படையில்‌ உள்ளாட்சிகளின்‌ உரிமைகளுக்காக மய்யமானது தொடர்ந்து குரல்கொடுத்து வந்திருக்கிறது.

மய்யத்தின்‌ அனைத்து மாவட்ட நிர்வாகிகளும்‌ தவறாமல்‌ கிராமசபைக்‌ கூட்டங்களில்‌ பங்கேற்று, தங்களது ஜனநாயகக்‌ கடமையினை செவ்வனே தொடர்ந்து செய்துவந்திருக்கின்றனா்‌. கிராமங்களுக்கு மட்டுமல்ல, நகாப்புறத்திலும்‌ ஆட்சி நிர்வாகத்தில்‌ மக்களின்‌ பங்கேற்பை உறுதிப்படுத்த “ஏரியா சபை, வார்டு கமிட்டி போன்ற அமைப்புகள்‌ விரைவில்‌ செயல்பாட்டிற்கு வரவேண்டும்‌ என்று தொடர்ந்து வலியறுத்திவருகிறோம்‌.

நகாப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில்‌ தேர்தல்‌ அறிவிக்கப்படவுள்ளது. இந்தச்‌ சமயத்தில்‌ மக்கள்‌ நீதி மயயத்தின்‌ சார்பாக தேர்தலில்‌ போட்டியிட உள்ள வேட்பாளர்களைத்‌ தேர்வு செய்யும் பொருட்டு, துணைத்‌ தலைவர்‌ A.G.மெளரியா, I.P.S(Rtd.,)தலைமையில்‌ மாநிலத்‌ தேர்தல்‌ தலைமைப்‌ பணிக்‌ குழு மற்றும்‌ நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தல்‌ நடைபெறவுள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான நாடாளுமன்றத்‌ தொகுதிக்கு உட்பட்ட தேர்தல்‌ பணிக்குழுவை அறிவிக்கிறேன்‌.

நகர்ப்புற உள்ளாட்சித்‌ தோதலுக்கான வேட்புமனு தாக்கல்‌ செய்ய விருப்பமுள்ளவர்கள்‌, கீழ்க்காணும்‌ இணையத்தின்‌ வழியாகவும்‌ விண்ணப்பிக்கலாம்‌.

இணைய முகவரி:http://www.maiam.com/application—form.php

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மாநிலத் தேர்தல் தலைமைப் பணிக்குழு மற்றும் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளதில் திருப்பூர் மற்றும் கோவைக்கு, மாநில செயலாளர் (தலைமை நிலையப் பரப்புரையாளர்) பொறுப்பு அனுஷாரவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...