உதகையில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கத்தியால் குத்திக்கொலை

உதகை படகு இல்லம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதிகள் கொண்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: உதகை படகு இல்லம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதிகள் கொண்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதகை படகு இல்லம் அருகே தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன அப்பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சிவா என்பவர் பரத் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டார் உடனடியாக அப்பகுதியிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிவாவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற வழியில் சிவா உயிரிழந்தார்.

இதையடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் அப்பகுதியிலிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.



சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது இருவருக்கும் ஏற்கனவே முன்பகை இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் காரணமாகத் தகராறு இருந்து வந்துள்ளதாகவும் இதையடுத்து இருவருக்கும் இன்று மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர்.

பின்பு ஆத்திரமடைந்த பரத் சிவாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிவா உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் பரத்தை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக உதகையில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...