முன்னால் அமைச்சர் S.P. வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட அதிமுக செயல் வீரர் கூட்டம்

அதிமுக அலுவலகத்தில் முன்னால் அமைச்சர் S.P.வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட அதிமுக செயல் வீரர் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த செயல் வீரர் கூட்டத்திற்காக ஏராளமான அதிமுகவினர் அலுவலகம் முன்பு கூடியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



கோவை: அதிமுக அலுவலகத்தில் முன்னால் அமைச்சர் S.P.வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட அதிமுக செயல் வீரர் கூட்டம் இன்று நடைபெற்றது.



இந்த செயல் வீரர் கூட்டத்திற்காக ஏராளமான அதிமுகவினர் அலுவலகம் முன்பு கூடியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுன் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் இருவரும் தமிழக அரசைக் கண்டித்து கடுமையான பேச்சுகளை முன்வைத்தனர்.



இக்கூட்டத்தில் பேசிய முன்னால் அமைச்சர் S.P.வேலுமணி, 7 மாத ஆட்சியில் மக்களுக்கு எந்த திட்டமும் செய்யாத திமுக அரசைக் கண்டித்து 9 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது எனவும் திமுக ஆட்சிக்கு வந்து 7 மாதத்தில் எதுவும் செய்யவில்லை, வெறும் விளம்பரத்தில் இந்த ஆட்சி ஒடுகின்றது என தெரிவித்தார்.

பத்திரிகைகள் எங்களைத்தான் இப்போதும் விமர்சிக்கின்றன என தெரிவித்த அவர் அதிமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து எதுவும் நடைபெறவில்லை, ஆனால் இப்போது மண் லாரி, மணல் லாரி ,கிராவல் எதுவுமே ஓட்ட முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் அனைத்திற்கும் எங்கள் மீது பழி போடுகின்றார் என தெரிவித்த அவர், அதிமுக குறித்துத்தான் பத்திரிகைகள், ஊடகங்கள் விவாதம் நடத்துகின்றனர் என கூறிய அவர், தற்கொலை செய்து கொண்ட அரசு ஊழியர் குறித்து ஊடகங்கள் ஏன் விவாதம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.



ஊடகங்கள் இந்த ஆட்சியில் பயப்படுகின்றனர் என தெரிவித்த அவர், 10 ஆண்டுகளாகக் காவல் துறை எப்படி இருந்தது, இப்போது அதிமுக மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ஜுனன் வழக்குப் பதிவு செய்கின்றனர் என கூறிய அவர், தமிழக முதல்வர் வரும் போது கூடிய கூட்டத்திற்குக் காவல் துறை வழக்குப் போடப்பட்டதா? என கேள்வி எழுப்பினார்.

கோவை காவல் துறை நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்த அவர், காலம் காலமாக இந்த அலுவலகத்தில் மீட்டிங் நடக்கும் போது கூட்டம் இருக்கும் என தெரிவித்த அவர், கமிஷனர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் வந்து போராடும் நிலையைக் காவல் துறை ஏற்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்தார்.



50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியைக் கடந்த ஆட்சியில் கொடுத்தோம், ஆனால் இந்த அரசு கோவையில் 300 சாலை பணிகளை ரத்து செய்து இருக்கின்றனர் என தெரிவித்த அவர், கோவையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு ஒவ்வொரு டிவிசனில் இருந்தும் 200 பேர் அழைத்து வர வேண்டும் எனவும், ஒரு லட்சம் பேர் திரண்டு கோவையில் நடத்தும் போராட்டத்தால், கோவையில் நிறுத்தப்பட்ட திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

ஆட்களை அழைத்து வருவதைக் கண்காணிக்க கூட்டணியில் இருந்து குழுக்கள் அமைத்துள்ளோம் என தெரிவித்த அவர், தமிழகத்திலேயே மிகப்பெரிய கூட்டம் கோவை கூட்டமாக இருக்க வேண்டும், நம் கூட்டத்தைப் பார்த்து கோட்டையே நடுங்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

காவல் துறை வழக்கு போட்டால் எதிர்வினையாற்றத் தயார் என்ற எச்சரிக்கையினை கோவை காவல் துறைக்கு வைக்கின்றோம் என தெரிவித்த அவர், காவல் துறை நம்மை தடுத்தால் அதை பார்த்துக்கொள்ளலாம், காவல் துறை தேவையில்லாமல் எங்களைச் சீண்டாதீர்கள் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றிய 5-தீர்மானங்கள்:-

மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து வரும் 9-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.

முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாகக் கழக ஒருங்கிணைப்பாளராகவும் பன்னீர் செல்வம் துணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

அதிமுக கட்சிக்கான கிளை நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு நிர்வாகிகள், நகர வார்டு நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்ட நிர்வாகிகளுக்கான போட்டியினை வரும் 22 மற்றும் 23 அன்று நடத்துவது என்ற தீர்மானமும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி அடைய வேண்டும் என்றும், வரும் உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்திட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்தை இக்கூட்டம் வலியுறுத்துகிறது போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...