சரவணா ஸ்டோர்ஸ் வருமானத் துறை சோதனை: ரூ.1000 கோடிக்கு மேல் வருமானம் மறைத்தது அம்பலம்

37 இடங்களில் நடைபெற்ற சோதனையில், ஒரு நிறுவனத்தில் மட்டும் பல ஆண்டுகளாக வரவு செலவு கணக்கில் ரூபாய். 1000 கோடிக்கு மேல் குளறுபடி செய்து வந்துள்ளது அம்பலம்.


கோவை: சென்னையில் கடந்த வாரம் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பல்வேறு கிளைகளில் வருமான வரி சோதனை நடைபெற்றதை அடுத்து, வருமான வரித்துறையினர் திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதில், சென்னை, மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் உள்ள 37 இடங்களில் நடைபெற்ற சோதனையில், ஒரு நிறுவனத்தில் மட்டும் பல ஆண்டுகளாக தங்கள் விற்பனையைக் குறைத்து மதிப்பிட்டு வரவு செலவு கணக்கில் ரூபாய். 1000 கோடிக்கு மேல் குளறுபடி செய்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

இவ்விரு நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் கணக்கில் வராத 10 கோடி ரூபாய் ரொக்கமும், 9 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனத்தில் ஒன்றில் மட்டுமே கடந்த சில ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் மறைக்கப்பட்ட்டுள்ளதோடு 150 கோடி ரூபாய் அளவுக்கு ரசீது இல்லாமல் பணமாக கொடுத்து ஜவுளி மற்றும் நகைகள் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு நிறுவனத்தில் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி ரசீதுகள் கைபடப்பட்டுள்ளது. மேலும், பழைய பொருட்களை விற்பனை செய்ததில் சுமார் 7 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது, என வருமான துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...