கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன் வந்த தம்பதியினரால் பரபரப்பு

கொடுத்த பணத்தை கேட்டதால், பிளேடால் கீறியும் நீ வெளியூர் ஆள் இங்கு தொழில் செய்யக் கூடாது என மிரட்டியதாக கூறி கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன் வந்த தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன் வந்த தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முத்துமாரி-கணேசன் தம்பதியினர். கடந்த 10- வருடங்களாகக் கோவை மதுக்கரை மரப்பாலம் செட்டி பாளையம் பிரிவு பகுதியில் தங்கி ரெடிமேட் காம்பவுண்ட் செப்டிக் டேங்க் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

இவர்களிடம் திருமலையாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் பணியாற்றி வந்துள்ளார். கணேசனிடம் 13,000 பணம் பெற்று இருந்ததாகவும் தனியாகத் தொழில் செய்யப் போகிறேன் என கூறி விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கொடுத்த பணத்தைக் கணேசன் கேட்டு வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காளிமுத்து பத்து பேருடன் வந்திருந்தவர் கணேசனைத் தாக்கியதுடன் அவரது மகனை பிளேடால் கீறியதாகவும் நீ வெளியூர் ஆள் இங்கு தொழில் செய்யக் கூடாது என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் அடங்கிய பாட்டிலுடன் வந்த தம்பதியினரிடம் பணியிலிருந்த காவலர்கள் அதனைப் பறித்தனர்.



இதன் பின்னர் அவர்கள் கொண்டு வந்த மனுவை ஆட்சியரிடம் அளிக்க அழைத்துச் சென்றனர்.



கணேசன்-முத்துமாரி தம்பதியினர் கூறுகையில், தங்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும், இந்த விவகாரம் காரணமாகப் பள்ளிக்குச் செல்ல தங்களது மகன் அச்சப்படுவதாகத் தெரிவித்தவர்கள் பாதுகாப்பு அளிப்பதுடன் தங்களை அச்சுறுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...