திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.35-லட்சம் மோசடி: பணத்தை பெற்றுத்தர பாதிக்கப்பட்டவர்கள் புகார்

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி 35-லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட பெண்ணிடமிருந்த பணத்தை மீட்டுத் தரக்கோரிப் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி 35-லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட பெண்ணிடமிருந்த பணத்தை மீட்டுத் தரக்கோரிப் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர் அருள்புரம் பகுதியில் வசித்து வந்தவர் தேவகி. இவர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நன்றாகப் பழகி வந்ததை அடுத்து நம்பிக்கையின் அடிப்படையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அவரிடம் மாதச் சீட்டு சேர்ந்துள்ளனர்.



இந்நிலையில், சீட்டு முடிந்து பல மாதங்களாகியும் தங்களுக்குப் பணம் திருப்பித் தராததால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்ததாகவும் ஆனால் இதுவரை பணத்தைத் திருப்பித் தராமல் கடந்த ஒரு வாரக் காலமாக அவர் தலைமறைவாகி விட்டதால் உடனடியாக சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து தங்களுக்கான பணத்தைத் திருப்பித்தர வேண்டும் என வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்படப் பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...