விதை சான்றளிப்பு இயக்குநர் அலுவலகம் கோவையிலேயே தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்- தமிழக முதல்வருக்கு விவசாயிகள் வேண்டுகோள்

கோவையில் இயங்கி வரும் விதை சான்றளிப்பு துறை இயக்குநர் அலுவலகத்தைச் சென்னைக்கு மாற்றம் செய்யாமல் கோவையிலேயே செயல்பட அனுமதிக்கத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் இயங்கி வரும் விதை சான்றளிப்பு துறை இயக்குநர் அலுவலகத்தைச் சென்னைக்கு மாற்றம் செய்யாமல் கோவையிலேயே செயல்பட அனுமதிக்கத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:-

தமிழக விதை சான்றளிப்பு துறை, அங்கச்சான்று துறை கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 50 ஆண்டுகாலமாகச் செயல்பட்டு வருகிறது. இத்துறையில் 835 பணியாளர்கள் உள்ளனர். கோவையில் மட்டும் 60 பணியாளர்கள் பணி புரிகிறார்கள்.

இந்த துறையின் மூலம் விவசாயிகள் ஒப்பந்த சாகுபடியாளர்கள், தனியார் விதை உற்பத்தியாளர்கள் போன்றவர்களின் விதைகள் பரிசோதிக்கப்பட்டு சான்று அளிக்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளில் சான்று விதைப் பண்ணை பதிவு 55 ஆயிரம் எக்டேர் ஆகும்.

சான்று விதை உற்பத்தி சுமார் 1.10 லட்சம் டன்கள் ஆகும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களிலிருந்து மொத்தம் 70 சதவீத விதைப் பண்ணைகள் பதிவு செய்து நடைமுறையில் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தை மையப்படுத்தி இந்த இயக்குநர் அலுவலகம் கோவையில் செயல்படுவதால் விவசாயிகளுக்கு இது மிகவும் சிரமம் இல்லாமல் இருந்து வருகிறது.

எனவே இந்த அலுவலகத்தைச் சென்னைக்கு மாற்றம் செய்யக்கூடாது என தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...