கோவை அரசு மருத்துவமனையில் குறைந்த வாடகையில் சிறப்பு வார்டு உருவாக்க திட்டம்..!

கோவை அரசு மருத்துவமனைக்கு அனைத்து வகை நோயாளிகள் வந்து சிகிச்சை பெறும் வகையில் தனியார் மருத்துவமனை போன்று குறைந்த வாடகையில் சிறப்பு வார்டு உருவாக்க ஆலோசித்து அதற்கான இடங்களைப் பார்த்து வருவதாக அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் குறைந்த வாடகையில் சிறப்பு வார்டு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனைக்குத் தினமும் பல்வேறு மாவட்டங்கள், அருகில் உள்ள கேரளா மாநிலம் போன்றவற்றிலிருந்து 5-ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இங்கு ஏழை, எளியோர் மட்டுமின்றி வசதி படைத்தவர்களும் வந்து சிகிச்சை பெறும் வகையில் குறைந்த வாடகையில் சிறப்பு வார்டு உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ‘‘கோவை அரசு மருத்துவமனைக்கு அனைத்து வகை நோயாளிகள் வந்து சிகிச்சை பெறும் வகையில் தனியார் மருத்துவமனை போன்று குறைந்த வாடகையில் சிறப்பு வார்டு உருவாக்க ஆலோசித்து அதற்கான இடங்களைப் பார்த்து வருகிறோம். இந்த புதிய திட்டம் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் செயல்படுத்தப்படும்,’’ என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...