கோவையை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது..!

கிராவல் மண் எடுத்துச்செல்லும் வாகனத்தை இயக்குவது தொடர்பாக, கோவையைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் 25,000 லஞ்சம் வாங்கியதால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவையைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் 25,000 லஞ்சம் வாங்கியதால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.

கோவையைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (38). திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் வருவாய் ஆய்வாளராக உள்ளார். கிராவல் மண் எடுத்துச்செல்லும் வாகனத்தை இயக்குவது தொடர்பாக, ரூ.30 ஆயிரத்தை ஒருவரிடம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.

தொடர்புடைய நபர் பேரம் பேசியதில் ரூ.25 ஆயிரம் தருமாறு செந்தில்குமார் கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பம் இல்லாத அந்நபர், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் அளித்தார். போலீஸாரின் அறிவுறுத்தல் படி, ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, வருவாய் ஆய்வாளரிடம் அந்நபர் கொடுத்துள்ளார். அப்போது கையும், களவுமாகச் செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...