பொள்ளாச்சியில் அடிப்படை வசதி கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மாக்கினாம்பட்டி ஊராட்சியில் குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் முற்றுகை போராட்டம்.


கோவை: பொள்ளாச்சியில் அடிப்படை வசதிகள் கோரி இரண்டாவது முறையாக பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மாக்கினாம்பட்டி ஊராட்சி. நகராட்சி பகுதியை ஒட்டிய இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 12 வார்டுகளில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளாகவே குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக செய்து கொடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோரிக்கை தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டனர். ஆனால், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாகவே இருந்து வருவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், அதிருப்தியடைந்த பொதுமக்கள் இரண்டாவது முறையாக மீண்டும் ஊராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்,அடிப்படை வசதிகள் விரைவில்செய்து கொடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் உறுதி அளித்ததின் பேரில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...