பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் கேரளாவில் இருந்து வந்த ஆசியருக்கு கொரோனா; இரு மாணவர்களுக்கு தொற்று உறுதி.
கோவை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில், பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பரிசோதனையில், 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கும், 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையறிந்து, மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "கேரளாவில் இருந்து வரும் ஆசிரியர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டதை, தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து வகுப்பறைகள், மற்றும் பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது", என்றனர்.

இதனால், தொடர்ந்து 2 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் 240 மாணவ- மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
இதே போல, சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வலசுபாளையம் கிராமத்தில் 9 வயது பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டான்.
இதனையடுத்து, மாணவனுக்கு கோவை சிங்காநல்லுரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, சுல்தான்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா உத்தரவின்பேரில், வலசுபாளையத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும், அக்கிராமம் முழுவதும் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.