மேட்டுப்பாளையத்தில் போதிய அரசு பேருந்து இல்லாததால் மாணவிகள் அவதி; பெற்றோர்கள் சாலை மறியல்..!

மேட்டுப்பாளையத்தில் இருந்து பெரியபுத்தூருக்கு 8A என்ற ஒரே அரசுப்பேருந்து தேக்கம்பட்டி வழியாக இயங்கி வருவதால், மாணவர்கள் அவதி.


கோவை: மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் பகுதியில் மாணவிகளை பாதி வழியில் இறக்கி விட்டதாக கூறி, பேருந்தை பெற்றோர்கள் சிறை பிடித்ததால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து பெரியபுத்தூருக்கு 8A என்ற அரசுப்பேருந்து தேக்கம்பட்டி வழியாக இயங்கி வருகிறது. இந்த தடத்தில் ஓரிரு அரசுப்பேருந்துகளும், தனியார் பேருந்து ஒன்றும் மட்டுமே இயங்கி வருகிறது.

இந்நிலையில் , தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தேக்கம்பட்டி, வெல்ஸ்புரம், வேல் நகர், நெல்லித்துறை, விளாமரத்தூர், பூதப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேல்நிலை பள்ளி படிப்பிற்காக மேட்டுப்பாளையம், புஜங்கனூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு தான் செல்ல வேண்டும்.

இப்பகுதிகளில், இருந்து மேட்டுப்பாளையம் பள்ளிகளுக்கு செல்லும் 100 க்கும் மேற்பட்டமாணவர்கள் இப்பேருந்தை மட்டுமே நம்பி உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல மகாதேவபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாணவர்கள் 8 A அரசுப்பேருந்து மூலம் பயணித்துள்ளனர். அப்போது, கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் சில மாணவிகளை அடுத்த பேருந்து நிலையத்திலேயே இறக்கி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

நேரத்திற்கு வர வேண்டிய மாணவிகள் வீட்டிற்கு உரிய நேரத்தில் வராத காரணத்தால் பரிதவித்து பெற்றோர்கள் நேற்றிரவு, தேக்கம்பட்டி வழியாக மேட்டுப்பாளையம் செல்ல வந்த பேருந்தினை சிறைபிடித்து, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து பெற்றோர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்பட்டதை அடுத்து தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பாக அரசு பேருந்துகளில் மாணவிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...