சாலை விரிவாக்க பணிக்காக 3-பெரிய மரங்களை வெட்டுவதா?: சிறுவாணி விழுதுகள் சார்பில் மனு

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் 3-பெரிய மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் விரைவில் வெட்ட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த மரங்களைக் காப்பாற்ற வேண்டும் என சிறுவாணி விழுதுகள் சார்பில் மனு அளிக்கப்பட உள்ளது.


கோவை: நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் 3-பெரிய மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் விரைவில் வெட்ட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த மரங்களைக் காப்பாற்ற வேண்டும் என சிறுவாணி விழுதுகள் சார்பில் மனு அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சிறுவாணி விழுதுகள் சார்பில் கூறியதாவது:-



மத்வராயபுரம் ஊராட்சியில் இருட்டுப்பள்ளம் பகுதியில் விநாயகர் கோவில் எதிர்புறம் உள்ள நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் அரச மரம் மற்றும் அதன் அருகில் தெற்கு புறம் உள்ள புளிய மரம் மற்றும் நல்லூர்வயல் பகுதியில் இவாஞ்சலின் பள்ளி முன்பு உள்ள 3-பெரிய மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் விரைவில் வெட்ட உள்ளதாகவும், சாலை அகலப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.



ஏற்கனவே சாலைகள் போதுமான அளவு 2-வருடங்களுக்கு முன்பே அகலப்படுத்தி விட்டநிலையில், நாம் உயிர் வாழ பிராணவாயுவைத் தரும் இந்த மரங்களைக் குறிப்பாக அரச மரங்களை வெட்டுவதற்குப் பதில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதுமான அளவிற்குச் சாலை அகலமானதாக இருக்கும் என்றும், இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சுற்றுச்சூழல் மேல் அக்கறை கொண்டு பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வரும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த மரங்களைக் காப்பாற்ற வேண்டும் என சிறுவாணி விழுதுகள் சார்பில் மனு அளிக்கப்பட உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...