கோவையில் ரேசன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்ய முடியாமல் முதியவர்கள் தவிப்பு..!

கை ரேகை பதிக்கும் பயோ மெட்ரிக்ஸ் இயந்திரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும், முதியவர்கள் பலருக்கும் வயது முதிர்வு காரணமாக விரல் ரேகை பதிவு பெறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


கோவை: கை ரேகை பதிக்கும் பயோ மெட்ரிக்ஸ் இயந்திரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனை அடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள 1420-ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களிடம் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கை ரேகை பதிக்கும் பயோ மெட்ரிக்ஸ் இயந்திரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும், முதியவர்கள் பலருக்கும் வயது முதிர்வு காரணமாக விரல் ரேகை பதிவு பெறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரி கூறியதாவது:-

இந்த திட்டத்தின்படி, குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் யாராவது ஒருவர் கண்டிப்பாக ரேஷன் கடைக்கு வர வேண்டும். அவர்களின் விரல் ரேகையைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இதன்மூலம், ஒருவரின் ரேஷன் கார்டை பயன்படுத்தி மற்றவர்கள் பொருட்கள் வாங்குவது தடுக்கப்படுகிறது.

தற்போது, அந்த இயந்திரத்தின் சர்வர் (server) வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. முதியவர்களுக்கு விரல் ரேகை பதிவு செய்யமுடியவில்லை என்றால் அட்டையில் உள்ள மற்ற உறுப்பினர்கள் விரல் ரேகை பதிவு செய்து பொருட்கள் வாங்கலாம்.

இல்லையென்றால், சம்மந்தப்பட்ட ரேசன் கடையில் உள்ள ஊழியரிடம் விண்ணப்பம் படிவம் பெற்று மாவட்ட வழங்கல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். விசாரணைக்குப் பின், அவர் விரல் ரேகை இல்லாமல் பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...