கோவை கடைத்தெருக்களில் அதிகரிக்கும் கூட்டம்; மாநகராட்சி பறக்கும் படைகளை அதிகரிக்கத் திட்டம்..!

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைத்தெருக்களில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தற்போது பறக்கும் படைகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை: கொரோனா நோய் பரவல் சற்றே குறைந்துள்ளதால், கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, டவுன்ஹால், 100 அடி சாலை, காந்திபுரம் உள்ளிட்ட கடைத்தெரு பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இப்பகுதிகளில், கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்கும் பொருட்டு பறக்கும் படைகளை அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகரிப்பு, ஓமிக்ரான் பரவல், கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிப்பு உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர வருவாய்த்துறை, காவல்துறை என பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்தும், மக்களுக்குப் பயம் என்பதே இல்லை என்பதால், கொரோனா விதிமீறல்களைத் தீவிரமாகக் கண்காணிக்கப் பறக்கும் படைகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஜவுளிக் கடைகள், வணிக நிறுவனங்கள் மார்கெட் பகுதிகளில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

"கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கப் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைத்தெருக்களில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தற்போது பறக்கும் படைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்,’’ என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...